புழல் சிறையில் மகேஷை சந்தித்தார் உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் கோபம்
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷே, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, நேற்று சந்தித்து பேசினார். சிறையில் இருந்து வெளியே வந்த உதயநிதி கோபமாக கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார முறைகேடு வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஓரிரு நாட்களில் அன்பில் மகேஷே, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் 12:30 மணிக்கு, புழல் சிறையில் உள்ள மகேஷே, தி.மு.க.,வின் இளைஞர் அணி செயலர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
அரை மணி நேரத்திற்கு மேல், மகேஷுடன் பேசிய உதயநிதி, சிறையில் இருந்து வெளியே கோபமாக வந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம், கோபமாக பேசிவிட்டு காரில் புறப்பட்டார். அதன்பின் சேகர்பாபு அளித்த பேட்டி:
காவல்துறை எப்போது அழைத்தாலும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தவர் மகேஷ். அடிப்படை முகாந்திரம் இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த அரசு எங்களை மிரட்ட பார்க்கிறது. அதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். சொந்த குடும்பத்தையே தாக்கும் இயக்கம், தி.மு.க., இல்லை. குடும்ப பாசத்தோடு உள்ள இயக்கம். இதை நிதி அமைச்சருக்கு தெரிவியுங்கள்.
அன்பில் மகேஷே பொறுத்தவரை எந்த கூடுதலான வசதியையும், அவர் புழல் சிறையில் கேட்கவில்லை. அவரை பொறுத்தவரை உறுதியாக இருக்கிறார். இந்த கைது நடவடிக்கை, மேலும் அவரை உறுதியாக்கி உள்ளது. ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் உறுதியோடு களத்தில் இருக்கும் வரை, எங்களை போன்றோருக்கு, எந்த அச்சமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
எவ்வளவு அடிச்சு கேட்டாலும் சின்னவன் என்ற என்பேரை சொல்லி விடாதே என்று சுடலை மகன் கேட்டு இருப்பானோ
அப்படி என்ன கோபம்...?? யார்மீது....??? அப்படி என்னதான் பேசினார் கோபமாக...???
அன்பில் மகேஸுக்கு எதிரான கேஸ் வீக்கானதா? ஆழம் தெரியாமல் காலை விட்டதா தவெக?
1. புகார்தாரர்: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி. இளங்கோவன். 2. குற்றஞ்சாட்டப்பட்டவர்: அதே கூட்டமைப்பின் தலைவராக இருந்த பி.டி. அரசகுமார். இளங்கோவன் அளித்த புகாரின் சாரம்சம் என்னவென்றால், "தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, தடையில்லா சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி அரசகுமார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டார்" என்பதுதான். முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன் - குற்றப்பத்திரிகையே இல்லை புகாரின் பேரில் கடந்த ஜூன் 27 அன்று பி.டி. அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆனால், அதன்பிறகு நடந்தவைதான் வழக்கை உற்றுநோக்க வைக்கின்றன:முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அரசகுமார் மீது போலீசாரால் போதிய ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் காவல்துறை நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இதனால், சட்டப்படியான காலக்கெடு முடிந்ததன் அடிப்படையில் நீதிமன்றம் அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதாவது, பணம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரின் மீதான குற்றச்சாட்டுகளையே சட்டப்படி நிரூபிக்க முடியாமல் போனதுடன், அவர் தற்போது ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார். திடீரென நுழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் பெயர் அரசகுமார் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், "அரசகுமார் வசூலித்த பணம் அன்பில் மகேஸுக்கு கைமாறியது" என்ற புதிய கோணம் திடீரென வழக்கில் சேர்க்கப்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வரும் ஒரு சாதாரண பாமரர் கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலான சில கேள்விகளை தொகுத்துள்ளோம்: பள்ளிகளிடம் நேரடியாகப் பணம் பேசியதாகக் கூறப்படும் முதன்மைக் குற்றவாளி அரசகுமார் ஜாமீனில் சுதந்திரமாக உள்ளார். சட்டப்படி கையூட்டு வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் குற்றமே. ஆனால், பணம் கொடுத்ததாகச் சொல்லப்படும் 170-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மீதோ, அதன் நிர்வாகிகள் மீதோ எந்தவித வழக்கும் இல்லை. அவர்கள் வெறும் பாதிக்கப்பட்டவர்களாகவே காட்டப்படுகிறார்கள். ஒட்டுமொத்த வழக்கும் இளங்கோவன் அளித்த ஒற்றைப் புகாரையும், அரசகுமார் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு நிற்கிறது. அடிப்படை வழக்கிலேயே குற்றப்பத்திரிகை இல்லாதபோது, பின்னர் பெயர் சேர்க்கப்பட்ட ஒருவரைக் கைது செய்வது சட்ட ரீதியாக எவ்வளவு தூரம் நிலைக்கும் என்ற கேள்வி எழுகிறது. உச்சநீதிமன்றத்தில் நிற்க முடியுமா? விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஒருவரை, ஆதாரங்கள் உறுதியாகிராத நிலையிலும், முதல் குற்றவாளிக்கே குற்றப்பத்திரிகை இல்லாத சூழலிலும் கைது செய்திருப்பது, "கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே அவசரமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை" என்ற அரசியல் விமர்சனங்களை வலுப்படுத்தியுள்ளது. வழக்கின் மூலக் காரணமே இவ்வளவு பலவீனமாக இருக்கும்போது, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டால், "கைது செய்வதற்கான உறுதியான முகாந்திரமோ அல்லது ஆதார அடிப்படைகளோ இல்லை" என்ற வாதத்தின் அடிப்படையில் மாநில அரசு மற்றும் காவல் துறையின் இந்த நடவடிக்கை கடுமையான சட்டச் சவாலைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எங்களை எதிர்த்தவர்களுக்கு மெழுகுவத்தி உருட்ட வெச்சி மலர்வளையம் வைத்த இயக்கம் தான் DMK ,எத்ர்த்தவர்கள் எல்லாம் காணாமல் புகை யாகி போ இன்றும் ஆலமரம் போல நிற்பது DMK
சேகர்பாபு தொண்டர்களிடம் பேசியதை கவனித்தால், இந்த கைது நடவடிக்கை தொண்டர்களிடம் கட்சியை பற்றிய நம்பிக்கை போய்விட்டது என்பதையும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் த வெ க வுக்கு தாவி விடுவார்கள் என்றும் தெரிகிறது. மொத்ததில் களவாணி கூட்டத்தில் சலசலப்பு. இனிமேல் திமுக பெரியபுள்ளிகள் கைதானால் திஹாரில் அடைக்க வேண்டும்
பெரியவரே எங்களை எதிர்த்தவர்களை எல்லாம் மலர் வலயம் வைத்து அழகு பார்த்த இயக்கம் தான் DMK உங்க வசதி எப்படி
யோவ், ஆஸ்கர் நாயகா அன்பில், என்னையை கோர்த்து விட்டு விடாதேய்யா. அடித்துக் கூட கேட்பாக அப்பவும் சொல்லி விடாதே.
சேகர் பாபு வாய் வைத்து விட்டார்.. இனி உருப்பட்ட மாதிரிதான்..
மகேஷ் உண்மையைஉளறிட்டாருங்கற கோபம்மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை