அபிஷேக் சர்மா அதிரடி சதம்: இந்திய அணி அபார வெற்றி
வெலிங்டன்:நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி இன்று (அக்., 27) நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் 89, பின் ஆலன் 40 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர்.
க்ளென் பிலிப்ஸ் 17 ரன்களும் பெவன் ஜேக்கப்ஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன் எடுத்தது.
199 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் சூர்யவன்ஷியும் அபிஷே க் சர்மாவும் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் இறங்கினர்.
அபிஷேக் சர்மா அதிரடி சதம்
அதிரடியாக விளையாடிய அபிஷே க் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்தார். அவருக்கு துணையாக அதிரடி காட்டிய வைபவ் சூரியவன்ஷி 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 45 ரன் எடுத்து அவுட் ஆனார். இருவரும் துவக்கம் முதலே சிக்ஸர்கள், பவுண்டரிகளாக பறக்க விட்டனர்.
இறுதியில் அபிஷேக் சர்மா 113 ரன்களில் அவுட் ஆனார்.அதில் 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.சஞ்சு சாம்சன் 18 ரன்னுக்கு வெளியேறினார், திலக் வர்மா 1 ரன், நமன் திர் 4 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.
இந்திய அணி, 13.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணி பெற்று தொடரை வென்றுள்ளது.
இந்திய அணிக்கு வாழ்த்துகள்அதேபோல் சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கும் வாழ்த்துகள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்திய மகளிர் அணியும் சரி, ஆடவர் அணியும் சரி, நாம் எப்பொழுதும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் எப்போதும் வெற்றிக் கனியைத்தான் சுவைத்துக் கொண்டிருக்கின்றோம். வாழ்த்துகள் இந்திய மகளிர் அணிக்கும் ஆடவர் அணிக்கும். தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்...நன்று
மகத்தான வெற்றி.மேலும்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
-
ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்; தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
-
அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு