திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
திருச்சி: திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்திற்காக ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்திருந்தது.
இதேபோல, நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏபி நந்தகுமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது செல்போனில் டெண்டருக்கு பணம் பெற்றது, பணிநியமனத்திற்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கவி பிரசாத்தின் மூலமாகத் தான், நேரு அவரது சகோதரர் லஞ்சப் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் லண்டனுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கவிபிரசாத் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
@block_G@
அஞ்ச மாட்டோம்!
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை; பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்ட முதல்வர், மக்களின் கவனத்தையும், ஊடகங்களின் பிரேக்கிங் செய்தியையும் திசைதிருப்ப ரோடுஷோ நடத்தலாமா? ரெய்டு ஷோ நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் தவெக எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும், முதல்வர் மே டையில் பஞ்ச் டயலாக் என்ற பெயரில் காட்டுக்கத்து கத்துவதற்காக நடத்தப்படும் இந்த ரெய்டுகளை கண்டு திமுக தொண்டரின் கால்நகம் கூட அஞ்சாது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த தவெக ஆட்சியைக் கண்டு, தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் தவெக அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.block_G
களத்தில் தினமலர்!
முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி ரெய்டு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
ஆக ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால் நேரு புனிதமானவர் என்று.
Famous chambal valley comes to mind
கோணல் ஸாரி நேரு இன்னும் வீட்டில் ஆதாரங்களை வைத்திருக்கும் அளவுக்கு முட்...ள் இல்லை. அவர் ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதியின் வளர்ப்பு. ஆதாரங்களை வைத்திருக்க வாய்ப்பே இல்லை.
கபில் சிபலுக்கு ஜாலி . 2 100 = 200 கோடி .
Ippadi எழுதுவதுக்கு இந்த அறிவு கொழுந்துக்கு எப்படி வருகிறது?
ரூ 643 கோடி 6000 கோடியாக உயரம் வரை சோதனை செய்துக்கொண்டே...... இருங்கள். ஓட்டளித்த ஏழை ஜனங்கள் தெரு கோடியிலே ? வெளங்கிடும் தமிழ்நாடு.
நல்ல நீதி கிடைக்கும் வரை இவர்களுக்கு அழிவே இல்லை. இவர்கள் தப்பித்து கொண்டே இருப்பார்கள். நல்ல நீதி அரசர்கள் எங்கே கிடைப்பார்கள்.
நல்ல நாள் பார்த்து உள்ளே, உள்ளுக்குள் உள்ளே அதன் உள்ளே தள்ளி நன்றாக இறுக பூட்டி சாவியை தொலைத்து விடுங்கள். அப்போது ஜாமின் கிடைத்தாலும் வெளியே வரமுடியாது. எல்லா திமுக அமைச்சர்களும் including அப்பாவை உள்ளே தள்ளுங்கள். எவனும உத்தமன் இல்லை. அப்புறம் ஒன்றை எழுதி வாங்கி கொள்ளுங்கள். வெளியே வந்து தியாகிகள் வேஷம் போடக்கூடாது என்று.
எந்த காலத்துலயா இருக்குறிங்க.. இன்னும் ரெய்டு போயிட்டு இருக்குறிங்க..? சிறை கைதிகள தப்பிக்க விடுறிங்க.. ஊழல்வாதிகளையும் தப்பிக்க வைங்க.. போய் நல்லா டீ குடிச்சுட்டு வாங்க..
திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநிர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்திற்காக ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். ரொம்ப தாமதம். நேருவை எப்பவோ பிடிச்சு உள்ள போட்டுருக்கணும். எல்லா எவிடென்ஸும் இருக்குது. ஏன் இதை நீங்க இன்னும் செய்யல? தாமதமான முடிவு. இதை உடனே செய்யணும். அவர் வாங்கிய லஞ்சம் அனைத்தும் வெளிச்சமாகிவிட்டது. இனிமேல் தயங்க வேண்டியதில்லை. அவரை சிறையில் அடைக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்சப் புகார்கள், சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் சமூகத்திலும் ஊடகங்களிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்துகின்றன.
தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை DVAC விசாரணை மற்றும் சோதனைகளைத் தொடர்ந்து சட்ட நடைமுறைகளின்படி தகவல்களைத் திரட்டி வருகிறது. இந்தியாவில் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலோ அல்லது சோதனைகள் நடத்தப்பட்டாலோ, அதைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை மற்றும் சட்டப்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கைகளோ அல்லது அடுத்த கட்ட முடிவுகளோ மேற்கொள்ளப்படும்.சட்ட அமலாக்கத் துறையினரின் விசாரணைகள் குறிப்பிட்ட சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுவதால், வழக்கு விசாரணையின் போக்கிலேயே இதற்கான அடுத்தகட்ட தகவல்கள் தெரியவரும்...நன்றுமேலும்
-
தேசத்துரோக வழக்கில் திருநெல்வேலி கோர்ட்டில் சீமான் ஆஜர்
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்க முயற்சி: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
-
ஒரே நாளில் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்; மாற்றுத்திறனாளி தினேஷூக்கு பணி நியமன ஆணை
-
நிதி நிலைக்கு ஏற்றார் போல செலவு செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்
-
கணக்கில் இருந்த ரூ.35 கோடி மாயம்: பிஎன்பி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி