விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பழநி: பழநி ஆர்.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் கவுசிகா, தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வைத்தனர். விவசாயிகள் பேசுகையில், ‘நல்லதங்காள் ஓடை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனுமதி இன்றி மண் அள்ளுவதை தடுத்தால் அச்சுறுத்தல் வருகிறது’ என்றனர். விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நேர்முக உதவியாளர் கூறினார். கூட்டத்திற்கு குறைவான விவசாயிகளை வந்திருந்தனர்.

Advertisement