அரசால் வைட்டமின் ‘ஏ’ டானிக் மழலையர் பள்ளிகளில் வழங்கல்
கீழக்கரை: கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தனியார் மழலையர் பள்ளிகளில் வைட்டமின் ‘ஏ’ டானிக் வழங்கப்பட்டு வருகிறது.
அக்.,26 முதல் 30 வரை 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பள்ளிகள் தோறும் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருப்புல்லாணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப் கூறியதாவது:
மழலையர் பள்ளிகளில் பயிலும் சிறு குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ டானிக் உரிய முறையில் வழங்கப்படுகிறது. இதனை எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் கல்லீரலில் ஆறு மாதத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் நல்ல பலன் தருகிறது. மாலைக்கண் உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஆகிறது. சிறு வயது குழந்தைகள் அனைவருக்கும் இந்த டோஸ் வழங்குவதால் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் மூலம் வைட்டமின் ஏ வழங்கப்படுகிறது என்றார். கீழக்கரை அகமது தெருவில் உள்ள நியூ டேக் கேர் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ டானிக்' வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் யாசின் பாத்திமா, தாளாளர் மக்கள் டீம் காதர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
உதவித்தொகை சான்றிதழ் பெற ரூ.5,000மாற்றுத்திறனாளிகளிடம் வசூல் வேட்டை
-
ஒவ்வொரு மாணவர்களுக்கும் குறிக்கோள் அவசியம்: முதன்மைக் கல்வி அதிகாரி மகாலட்சுமி அறிவுரை
-
அரசு பள்ளியில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு: உயிர் தப்பிய மாணவர்கள்
-
முதியவர் பலி
-
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
-
நாயோடை நீர்த்தேக்க வாய்க்காலில் நீர்வரத்து