சிப்காட்டில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு மையம்

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில வருடங்களாக செயல்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சி சிப்காட்டில் 2016ம் ஆண்டு கனிமநிதி திட்டத்தின் கீழ் ரூ.6.30 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டினர். ஒரு குடம் ரூ.5 செலுத்தி குடிநீர் பெற்று வந்தனர். இதனால் சிப்காட், செய்களத்தூர், கள்ளர் வலசை, நத்தபுரக்கி, மகாலட்சுமி நகர் பகுதி மக்கள் குடிநீர் பெற்று வந்தனர். கடந்த சில ஆண்டாக சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றன. தொடர்ந்து சுத்திகரிப்பு நிலைய இயந்திரத்தை சீரமைத்து குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

Advertisement