அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்
திருநெல்வேலி: சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றி பெற்ற அதிமுகவின் இசக்கி சுப்பையா , எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இந்த தொகுதி காலியாக உள்ளது. இசக்கி சுப்பையா தவிர்த்து மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளது. அதிமுகவினர் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது.
இந்த வழக்கு முடிந்த உடன் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் கூறியது. அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவார் என கடந்த சில மாதங்களாக செய்தி வெளியாகி வந்தது.
இந்நிலையில், திருநெல்வேலியில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறுகையில், '' அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். என்னை பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள். திரைக்கவர்ச்சி மங்கும். உறவுகள் வேறு. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. நான் எப்போதுமே அனைத்து தேர்தல்களிலும் பொது வேட்பாளர் தான்.
சீமான் மேலும் கூறுகையில், சட்டசபையில் மக்களுக்காக குரல் தேவைப்படுகிறது என நினைக்கிறேன். தற்போது, பாமக எம்எல்ஏ சவுமியா, தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா மட்டுமே மக்களுக்காக பேசுகின்றனர். இன்னொரு வலிமையான குரல் தேவைப்படுகிறது என நினைக்கிறோம். சட்டசபையில், ' ஆல் இஸ் வெல்', காவலன், துள்ளாத மனமும் துள்ளும், மெர்சல் என சொல்பவர்களுக்கு இருக்கிறது பார்சல் .'' என்றார்.
கடந்த சட்டசபை தேர்தலில், காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/live/veUsjwL3rp4?si=c2hSTCT7cB-U9lQZ
வாசகர் கருத்து (32)
S.V.Srinivasan - Chennai,இந்தியா
30 அக்,2026 - 11:07 Report Abuse
அண்ணே , டெபாசிட் கிடைக்குமான்னு நல்லா யோசனை பண்ணி நில்லுங்க. 0
0
Reply
Karuthu kirukkan - Chennai,இந்தியா
30 அக்,2026 - 08:36 Report Abuse
ஒரே பாறையில் வெட்டி எடுத்த இரண்டு கற்களில் ஒன்று கோயிலில் கருவறையில் கடவுள் சிற்பமாக மக்களால் வணங்க படுகின்றனர் மற்றொன்று கோயிலின் வாயிற்படியில் சாதாரண வடிவமாக மக்கள் கால்களால் மிதிப்படுகின்றது ..ஒரு நல்ல அரசாங்கத்தை அமைப்பது சிற்பியாகிய மக்கள் நாம் தான் சிந்தியுங்கள் ....சிற்பமா/ படிக்கட்டா 0
0
Reply
ராஜா - ,
30 அக்,2026 - 08:26 Report Abuse
நீயெல்லா எதுக்கு அரசியலுக்கு வந்த அன்னே!? இலங்கை தமிழர்களிடம் இவருக்கு விசுவாசம் இல்லை. 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
30 அக்,2026 - 02:57 Report Abuse
ஆகவே மக்களே அம்பை தேர்தல் செலவுக்காக ஒரு பத்துக் கோடி நிதியாக தந்தால் அந்த வெள்ளிதோட்டாக்களின் துணையுடன் தேர்தல் களத்தை விசயுடனான போரில் வெற்றிபெற முயற்சிப்பேன்னு அடுத்த அறிக்கை விரைவில் வரும். 0
0
Reply
Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா
29 அக்,2026 - 22:14 Report Abuse
எப்பிடிப்பா? எப்பிடிப்பா? எப்பிடிப்பா? உன்னால எப்பிடிப்பா இப்பிடி ஒரு துண்ணுணி அளவு கூட ரோசம் இல்லாமே மேடையில செய்தியாளர்ட்டா பேச முடியுது? கூச்சமா இல்லியா? தாராபுரம் தொகுதியில் இருக்காரா வாக்குச் சாவடி எண்ணிக்கைய விடக் கம்மியா ஓட்டு வான்கித் தோத்துட்டு, திரள் நிதி இன்னொரு வாட்டி வாங்கி அமுத்திக்கலாம் இல்லாட்டி ஏதாவது ஒண்டிப்பிலிக் கச்சி மாட்டினாக்கா ஒரு அமவுண்டு சோலைலா தேறுதல் நிதி லவட்டிக்கலாம் 0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
29 அக்,2026 - 22:01 Report Abuse
விஜய் அரசியலுக்கு வரும்வரை திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் குற்றம்சொல்லிக்கொண்டு இருந்த சீமான், அவர்களையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு இப்போதெல்லாம் பொறாமையில் இப்பொது ஆட்சிக்கு வந்த விஜயை பற்றி மட்டுமே குறைகூறிக்கொண்டிருப்பது அசிங்கமாக இருக்கிறது. இது முழுக்கமுழுக்க விஜய் மீதான காழ்புணர்ச்சியின் உச்சமாக தோன்றுகிறது. 0
0
Reply
Sundar R - ,இந்தியா
29 அக்,2026 - 21:12 Report Abuse
"அம்பை வாக்காளர்களும், கன்னியாகுமரி ஜில்லா வாக்காளர்களும் என்றுமே தமிழக மக்களுக்கு நல்வழி காட்டுபவர்கள்" என்று காமராஜர் ஐயா அவர்கள் காலத்திலிருந்தே மக்கள் கூறுவார்கள்.
அந்த காலத்தில் கன்னியாகுமரி தொகுதிக்குச் செல்லாமலேயே, ஒரு பரப்புரையும் செய்யாமலேயே காமராஜர் ஐயா ஜெயித்தார்.
1950 முதல் இன்று வரை கன்னியாகுமரி ஜில்லாவில் திமுக 25 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஓரிரு சட்டசபை தொகுதிகளைத் தான் ஜெயித்துள்ளது.
கன்னியாகுமரி மக்களின் அறைகூவல் என்னவென்றால், "எந்த தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போடாதே" என்பது தான். 0
0
Modisha - Chennai ,இந்தியா
30 அக்,2026 - 09:27Report Abuse
அப்படி தெரியவில்லை . குமரி மக்கள் மத ரீதியாக எப்போதும் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள் . திருந்துவதாக தெரியவில்லை . 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
29 அக்,2026 - 20:54 Report Abuse
தோல்வி உறுதி என்று தெளிவாக தெரிந்தும் களம் இறங்கி தோல்வி காணுபவரை என்ன சொல்வது. 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
29 அக்,2026 - 20:34 Report Abuse
அரசியல் வாட்டர் மெலன் ஸ்டார். 0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
29 அக்,2026 - 20:19 Report Abuse
வரிசையில் இந்த திரள் நிதி. 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement