நெடுஞ்சாலைகளில் 120 கிமீ வேகத்தில் பயணம்: அபராதம் கூடாது என நிதின் கட்கரி அறிவுரை

- நமது நிருபர் -

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைகள் குறிதது மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

அவர் கூறியதாவது: டில்லி - மும்பை போன்ற விரைவுச்சாலைகளில் வேகமாக செல்வதால் சிலருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகின்றன. மணிக்கு 120 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்பவர்களுக்கு எந்த நோட்டீசும் அனுப்பக்கூடாது என அறிவுறுத்தி உள்ளேன். 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் 20 சதவீதம் கடுதல் வேகத்தில் செல்ல அவர்களை அனுமதிக்கலாம். இதனை தாண்டினால், அபராதம் விதிப்பதற்கான சலான் வழங்க வேண்டும்.

ஏஐ அடிப்படையில் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை அறிமுகம் செய்ய தொழில்துறையினர் ஆதரவு அளிக்க வேண்டும். 2022 முதல் 4 கோடி கார்கள்,20 கோடி டூவிலர்களும் இ20பெட்ரோலில் இயங்குகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு, எத்தனால் குறித்து அமளி செய்தனர். இப்போது அமைதியாகிவிட்டது. 2022 முதல் இ20 பெட்ரோல்பயன்படுத்தப்படுகிறது. இதுவரை யாராவது வாகனம் பழுது அடைந்துள்ளதா? இ20 பெட்ரோலுக்கு எதிராக பணம் கொடுத்து பிரசாரம் செய்ய தூண்டுகின்றனர். இவ்வாறு கட்காரி கூறினார்.

Advertisement