டிஜிட்டல் மோசடியால் ஏற்படும் இழப்பை கண்டறிவது வங்கிகளின் பொறுப்பு: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் டிஜிட்டல் கைது குறித்து விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதி கூறுகையில்,'' டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கண்டறியும் பொறுப்பு வங்கிகளுக்கு இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களை ஏமாற்றி, வழக்கத்திற்கு மாறாக நடக்கும் பணப்பரிமாற்றம் குறித்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களை எச்சரிப்பது வங்கியின் கடமை. டிஜிட்டல் கைது தொடர்பாக வழிகாட்டுதல்களுக்கு உட்படுத்த வேண்டிய வங்கிகளின் பட்டியலையும், பாதிக்கப்பட்டவர்களின் இழப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும்.இந்தாண்டு டிஜிட்டல் குற்றம் 50 சதவீதம் குறைந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் 800 கோடி ரூபாய் இழந்துள்ளனர் என்றார்.
டிஜிட்டல் கைது குறித்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்கும் நடவடிக்கைகளில் வாட்ஸாப் நிறுவனம் இணைய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.
வாட்ஸாப் அளித்த விளக்கத்தில்,'' இந்தாண்டு மட்டும், சந்தேகத்திற்கு இடமான 9,400 கணக்குகளை முடக்கி உள்ளோம்,'' எனத் தெரிவித்துள்ளது.
மேலும்
-
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்
-
தேசத்துரோக வழக்கில் திருநெல்வேலி கோர்ட்டில் சீமான் ஆஜர்
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்க முயற்சி: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
-
ஒரே நாளில் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்; மாற்றுத்திறனாளி தினேஷூக்கு பணி நியமன ஆணை
-
நிதி நிலைக்கு ஏற்றார் போல செலவு செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்