ஸ்ரீலங்கா ஆந்தை போடியில் தஞ்சம்
போடி: காக்கைக்கு பயந்து ஸ்ரீலங்காவில் வசிக்கும் பார்ன் இனத்தைச் சேர்ந்த ஆந்தை போடியில் தஞ்சம் அடைந்ததை தீயணைப்புத் துறையின் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
போடி மலைப் பகுதிகளில் ஸ்ரீலங்கா, அந்தமான் உள்ளிட்ட கடல் பகுதியில் வசிக்கும் பார்ன் இனத்தை சேர்ந்த ஆந்தை இனங்கள் இனப் பெருக்கத்திற்காக நவ., டிச., ஜன., பிப்., மாதங்களில் இப்பகுதிக்கு வருவது வழக்கம். இந்த இன ஆந்தைகளுக்கு முகம் ப்ரவுன் கலராகவும், கண்கள் பழுப்பு நிறமாக வும், இறக்கைகள் கருப்பு கலந்த புள்ளி களுடன் காணப்படும். இதன் விரல்கள் கடினமாகவும், விரைப்பாகவும் இருக்கும்.
நேற்று பார்ன் இனத்தை சேர்ந்த ஆந்தை போடி ரங்கநாதபுரம் மெயின் ரோட்டோரம் இருந்தது. காக்கைகள் விரட்டவும் பறக்க முடியாமல் பயந்த ஆந்தை அருகே இருந்த மங்களக் கோம்பை ஓடையில் தஞ்சம் அடைந்தது. இதனை கண்ட மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆந்தையை பிடித்து போடி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்கள் வனப்பகுதியில் விட்டனர்.