கமுதி, பார்த்திபனுார் பகுதியில் அக்.30ல் ‘ட்ரோன்’ பறக்க தடை

ராமநாதபுரம்: கமுதியில் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவில் அக்.,30ல் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு பார்த்திபனுார் மற்றும் கமுதி வட்ட எல்லைப் பகுதிகளில் அக்.,30ல் ‘ட்ரோன்’கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, மேற்கண்ட நாளில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.––

Advertisement