ஒரே நாளில் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்; மாற்றுத்திறனாளி தினேஷூக்கு பணி நியமன ஆணை

7

-நமது நிருபர்-

சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை நேற்று (அக்டோபர் 28):முதல்வர் விஜய் திறந்து வைத்தார். உள்ளே காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளை பார்வையிட்ட அவர், மாணவர்களின் திறமையை தட்டிக்கொடுத்து பாராட்டினார். மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளி தினேஷ் வேலைவாய்ப்பு கோரி முதல்வர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (அக்டோபர் 29) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.

ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை முதல்வர் விஜய் விதைத்திருக்கிறார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மாற்றுத்திறனாளி கோரிக்கைக்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Advertisement