கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

சென்னை: புழல் மற்றும் தேனி மாவட்ட சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடினர். இந்த சம்பவம் எதிரொலியாக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
சிறைத்துறை டிஜிபி ஆக இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் - டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி ஆகவும்
அமலாக்கப்பிரிவு சிஐடி ஆக இருக்கும் ஏடிஜிபி சங்கர்- சிறைத்துறை கூடுதல் டிஜபி ஆகவும் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

சஞ்சய் மாத்தூர்- குற்ற ஆவண காப்பக டிஜிபி

சோனல் சந்திரா - டிஜிபி அலுவலக ஐஜி

ரகுபதி- கரூர் எஸ்பி

ஸ்டாலின்- தென்காசி எஸ்பி

அசோசக் குமார்- பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பி, மதுரை ஆக நியமனம் செய்யப்பட்டனர்.

Advertisement