லைப் இன்னோவேஷன் பள்ளிக்கு விருது வழங்கல்

தேனி: தேனி வடபுதுப்பட்டி வேதா வளாகத்தில் செயல்பட்டு வரும் லைப் இன்னோஷன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.

லைப் இனோவேஷன் பள்ளிக்கு கல்வி, சமூக சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக ஜி.ஆர்.டி., கல்வி அறக்கட்டளை சார்பில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி பயில பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. லைப் பப்ளிக் பள்ளியில் தரமான கல்வி, உலகரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, புதிய கல்வி முறைகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக ஜி.ஆர்.டி., கல்வி அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் பள்ளி தாளாளர் நாராயணபிரபுவை பாராட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement