ஊரக வளர்ச்சி வங்கியில் விவசாயிகளுக்கு கடன்
செஞ்சி: செஞ்சி ஊரக வளர்ச்சி வங்கியில் விவசாயிகளுக்கு கன்று வளர்ப்புத் திட்டத்தின் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த சட்டசபை கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின்போது, விவசாயிகளுக்கு நீண்ட கால கடனாக ரூ.50 கோடி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, செஞ்சி ஊரக வளர்ச்சி வங்கியில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு கன்று வளர்ப்பு திட்டத்தில், ரூ.3.95 லட்சம் கடனுக்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் சரக துணைப்பதிவாளர் ஜீவிதா, மண்டல மேலாளர் செல்வகுமார், செயலாட்சியர் வீரசெல்வம், வங்கி செயலாளர் கதிரவன், மேற்பார்வையாளர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை
Advertisement
Advertisement