பஜாரில் சிறுத்தை உலா பேஜாரான உள்ளூர் மக்கள்

மஞ்சூர்: மஞ்சூர் பஜாரில் நள்ளிரவில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மஞ்சூர் பஜாரில் சமீப காலமாக காட்டெருமை, கரடி, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து அங்குள்ள சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. இதனால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (அக்.,26) மஞ்சூர் மேல் பஜார் சாலையில் குடியிருப்புக்கு எதிரே சாலையில் சிறுத்தை உலா வந்தது.

மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் உலாவரும் விலங்குளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,’ என்றனர்.

Advertisement