மழையின் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அன்னூர்: கனமழையின் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மதுபாலா அறிக்கை :
கன மழையின் போது விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி பரப்பை அடங்கல் மற்றும் இ அடங்கலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும். சாகுபடி நிலங்களின் ஓரங்களில், வயலின் சாய்வுத் தன்மைக்கு ஏற்ப, வடிகால் அமைத்து அதிகப்படியான மழை நீரை அகற்ற வேண்டும்.
மரத்தைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். இளஞ்செடிகளை காற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முட்டுக் கொடுக்க வேண்டும். அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். ஆண்டு பயிர்களை பொறுத்தவரை வேர் பகுதியில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க பார் அமைத்து நடவு மேற்கொள்ளலாம். பசுமை குடிலுக்கு அருகில் மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு
-
2028க்குள் மின்வாரியத்தில் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
-
அர்னாப் புயல் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்படும்; அமித் ஷா
-
நவம்பர் 2 வரை ஜாமின் கிடையாது; திமுக மாஜி அமைச்சர் மகேஷ் மனு ஒத்திவைப்பு
-
250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!
-
ரூ.100 கோடி லஞ்சம்; 5 மாதம் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ சரண்