ரூ.100 கோடி லஞ்சம்; 5 மாதம் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ சரண்
சென்னை: திமுக ஆட்சியில் அரசு அனுமதி அளிப்பதற்காக, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணை விஸ்வரூபம் பெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார், திமுக நிர்வாகி முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26ம் தேதி மகேஷ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அரசகுமார் ஜாமினில் வெளியே உள்ளார். ஜூன் மாதம் முதல் முத்துக்குமார் தலைமறைவாகி உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மகேஷின் கூட்டாளியான சண்முக பிரியா வீட்டில் நேற்று மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தற்போது, இந்த வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷூக்கு மிக நெருக்கமானவராக வலம் வந்தவர். விருதாச்சலம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த முத்துக்குமார், திமுக ஆட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
நாற்பது திருடர்களின் ஒவ்வொன்றாக மாட்டிக்கொள்கிறார்கள் .. கூடிய விரைவில் அலிபாபா மாட்டும் முன்பே .. வெளிநாட்டில் ஒளிந்து கொள்வது உறுதி. பாஸ்போர்ட் முடக்கி வைக்கவும் . தக்கதருணத்தில் உதவும் .
திமுகவின் கொள்ளை கூட்ட அடியாள், அல்லக்கைகள் இன்னும் எத்தனை பேரோ. ஆட்கள் அதிகமாக இருந்ததால் வழக்கை ஜவ்வாக இழுத்து விடுவார்கள்
கடவுள் இருக்கான் குமாரு. தெய்வம் நின்று கொல்லும். இது காலத்தின் கட்டாயம்.
மறைந்திருந்தா இவ்வ்ளோ நாட்களில் எல்லா தடயத்தையும் அழிச்சிருப்பான்.
இப்ப புரியுதா அன்பில் மகேஷுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு அவருக்கு ஜாமீன் கிடைக்காது ன்றதும் இவர் தான் சரணடைய
கடவுள் இருக்கான் குமாரு. இது காலத்தின் கட்டாயம்.
எனக்கென்னவோ இந்த சண்முகப்ரியா மகேசுக்கு மட்டுமின்றி சார் உட்பட பலருக்கும் கூட்டாளியாத்தான் இருந்திருப்பாங்க போல இருக்குமேலும்
-
அர்னாப் புயல் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்படும்; அமித் ஷா
-
நவம்பர் 2 வரை ஜாமின் கிடையாது; திமுக மாஜி அமைச்சர் மகேஷ் மனு ஒத்திவைப்பு
-
250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!
-
ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்; ஐநாவில் இந்தியா யோசனை
-
அரசிற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி
-
இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு