250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!

-நமது நிருபர்-




ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இன்று (அக்டோபர் 29) தனது சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவை சேர்ந்த 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதிகாலையிலேயே மின்னஞ்சல் வாயிலாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. "குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை நீக்குவது என்ற கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்," என அமேசான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அமேசான் தனது முக்கிய சில்லறை விற்பனைப் பிரிவில் ஆயிரம் பேரை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

கடந்த ஜனவரி மாதம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு(ஏஐ) அதிக முக்கியத்துவம் அளிக்க அமேசான் நிறுவனம் 16,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. தற்போது மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவில் (ஏஐ தொழில்நுட்பம்) அதிக முதலீடு செய்து வருகிறது.

நாம் அனைவரும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும், இல்லையெனில் நாம் பின்தங்கிவிடும் அபாயம் உள்ளது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement