சுயசான்று கட்டட மதிப்பால் அரசுக்கு வருவாய் இழப்பா? சார் – பதிவாளர்கள் புகார்
சென்னை: சொத்து பத்திரங்களை பதிவு செய்வதில், சுயசான்று முறையில் கட்டட மதிப்பு தெரிவிப்பதால், வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி, இத்திட்டத்தை முடக்க, சார் – பதிவாளர்கள் முயற்சிக்கின்றனர்.
சொத்து பத்திரங்கள் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சார் – பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும். இந்த பத்திரங்களில், நிலத்தின் மதிப்புடன், கட்டடத்தின் மதிப்பு சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள மதிப்புகள் அடிப்படையில், கட்டட மதிப்புகளை கடைபிடிக்க வேண்டும். இதில் கட்டடங்கள் தொடர்பாக, பொது மக்கள் தெரிவிக்கும் மதிப்புகளை சரிபார்க்க, சார் – பதிவாளர்கள் கள ஆய்வு செய்வது வழக்கம்.
இதனால், சார் – பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பொது மக்கள் சுயசான்று முறையில் கட்டட மதிப்பை தெரிவித்தால் போதும். அதிக மதிப்புள்ள கட்டடங்களுக்கு, உயர் மதிப்பை ஏற்பதாக உறுதிமொழி பத்திரம் வாங்கினால் போதும் என, பதிவுத் துறை அறிவித்தது.
இந்த புதிய நடைமுறை, செப்., மாதம் அமலுக்கு வந்தது.
இப்படி சுயசான்று முறையில் கட்டட மதிப்புகளை ஏற்க, சார் – பதிவாளர்கள் மறுக்கின்றனர். இதில் ஒரு பத்திரத்தில் கட்டடத்தின் பரப்பளவை, 100 சதுரடி குறைவாக கணக்கு காட்டினால், 1,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என, பதிவுத்துறை தலைவருக்கு சார் – பதிவாளர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிர்வாக நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், சுயசான்று கட்டட மதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொது மக்கள் மத்தியில், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால், சார் – பதிவாளர்கள், இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். இது, இத்திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை