பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் தனி அடையாள எண் பெறுவது கட்டாயம்: வேளாண் துறை இயக்குநர் தகவல்
புதுச்சேரி: மத்திய அரசின் பி.எம்.கிசான் நிதியுதவி பயனாளிகள், மத்திய விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெறுவத கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி வேளாண் துறை இயக்குநர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் அமைச்சகம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து பி.எம்.கிசான் என்ற அழைக்கப்படும் விவசாயிகள் கவுரவ நிதித் திட்டத்தில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, விவசாயத்தில் ஏற்படும் சாகுபடி செலவினங்களை ஈடுகட்ட ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழக்காட்டுதல்களின் படி, இனி, பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள், மத்திய விவசாயிகள் பதிவேட்டில் தம்மை பதிவு செய்துக்கொண்டு தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய விவசாயிகள் பதிவேட்டில், சம்மந்தப்பட்ட பி.எம்.கிசான் விவசாயிகளின் ஆதார் எண், ஆதார் இணையத் தளத்தில் சரிபார்க்கப்பட்டு, தங்கள் பெயரில் நிலப்பட்டா வைத்திருக்கும் பட்சத்தில், புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின், பட்டா விபரங்கள் அடங்கிய நில மகள் இணையத்தளத்தில் விபரங்கள் சரிபார்க்கப்படும். அதன் பின்னர், மத்திய விவசாயிகள் பதிவேட்டில் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
பட்டா இல்லாத பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு, அவர்களின் ஆதார் எண் மட்டும் ஆதார் இணையத்தளத்தில் சரிபார்க்கப்பட்டு பின்னர் பட்டா வழங்கப்படும் போது அவர்களின் நில விபரங்கள், மத்திய விவசாயிகள் பதிவேட்டில் இணைக்கப்பட்டு, பின்னர் அடையாள எண் வழங்கப்படும். எனவே, பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் அவர்களின் ஆதார் மற்றும் பட்டா நகல்களுடன் அவர்களின் உழவர் உதவியகத்தினை உடனடியாக அனுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். பட்டா இல்லாத பி.எம்.கிசான் பயனாளிகள் ஆதார் நகல் மட்டும் கொண்டு வரவும். இருவகை பயனாளிகளும் ஆதார் எண்ணில் இணைக்கப்பட்ட கைபேசியினை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை