2,500 பணியாளர்கள் தேர்வு செய்கிறது மின் வாரியம்

சென்னை: உதவி பொறியாளர் உள்ளிட்ட பல பதவிகளில், 2,558 பேரை தேர்வு செய்யும் பணியில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தில், 60,000 காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பணியில் உள்ளவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலியிடங்களை நிரப்பும் வகையில், உதவி கணக்கு அலுவலர் பதவியில், 100 பேர், உதவி பொறியாளர் எலக்ட்ரிகல், 555 பேர், உதவி பொறியாளர் மெக்கானிக்கல், 212 பேர், இளநிலை உதவியாளர் கணக்கு, 435 பேர் உட்பட, பல்வேறு பதவிகளில் மொத்தம், 2,558 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பதவிகளுக்கு எழுத்து, நேர்காணல் தேர்வுகள் வாயிலாக ஆட்களை தேர்வு செய்து தருமாறு, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தை, மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement