ரோட்டில் ஆதரவின்றி வாழும் மனநலம் பாதித்தவர்களுக்கு. அச்சுறுத்தல்: பெண்கள், முதியோர்களை பாதுகாப்பாக மீட்க வலியுறுத்தல்
- ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,ஆதரவின்றி சுற்றித்திரியும் பெண்கள், முதியோர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பாலியல் சீண்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல் ஏற்படுவதால் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் சாலையோரங்கள், பஸ் ஸ்டாண்ட், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களில் ஆதரவின்றி வாழ்கின்றனர். இவர்கள் உணவு, குடிநீர், உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு பிறரைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது.
குடும்பத்தின் ஆதரவு இல்லாததால் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதை பயன்படுத்தி சிலர் அவர்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கின்றனர். சமீபத்தில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அவரை பஸ் ஸ்டாண்டில் இரவில் படுத்திருந்தவர்கள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றனர்.
அங்கிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு ஒன் ஸ்டாப் மையத்தில் ஒப்படைத்தனர். பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் இருந்தும் இரவில் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து தாய்ப்பாசம் அறக்கட்டளை நிர்வாகி பாதுஷா நுாருல் சமது கூறியதாவது:
வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவோர் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்களை இங்கேயே விட்டு விட்டு சென்று விடுகின்றனர். குறிப்பாக பெண்கள், முதியோர்களை மீட்டு சிகிச்சையளித்து, அவர்களது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ---
மேலும்
-
பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை மூட எதிர்ப்பு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
-
கடலாமை கண்காணிப்புக்கு ரூ.30 லட்சம் விடுவிப்பு தமிழக அரசு உத்தரவு
-
தீபாவளி இனிப்பு, காரம் தரம் குறைவாக உள்ளதா? புகார் தெரிவிக்க வசதி
-
சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த முடிவு உயர்நிலை குழு அமைத்து முதல்வர் உத்தரவு
-
வீழ்த்த நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது யூடியூபர் மதுமிதா மீண்டும் வீடியோ
-
எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்