பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: ‘முரசு’ புயல் எதிரொலியால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் காரணமாக, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்கிடையே, இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுஉள்ளனர்.

Advertisement