விடுதலை நாள் விழாவில் பங்கேற்காத அரசு உயர் அதிகாரிகளுக்கு கண்டனம்
புதுச்சேரி: விடுதலை நாள் விழாவில் பங்கேற்காத அரசு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்க தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:
புதுச்சேரியில் நடந்த புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பங்கேற்காமல் அலட்சியம் காட்டிய பல அரசு உயர் அதிகாரிகளின் போக்கை புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கம் கண்டிக்கிறது.
புதுச்சேரி விடுதலை நாளான நவம்பர் 1ம் தேதி வரலாற்று சிறப்பு மற்றும் தேசபக்தி நிறைந்த நாளாகும். 1954ம் ஆண்டு மூன்று பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்து புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகள் விடுதலை பெற்று இந்திய யூனியனுடன் இணைந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் ஆகும்.
இந்தியாவிற்கு 1947, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தபோதிலும், புதுச்சேரி மக்கள் தங்களின் சுதந்திரத்தை பெற மேலும் 7 ஆண்டுகள் போராட்டங்களையும் தியாகங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது. பொறுப்புள்ள நிர்வாக அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் இருப்பது, நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுக்குச் செய்யும் அவமரியாதையாகும்.
இது புதுச்சேரி மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ விடுதலை நாள் விழாவில் கலந்துகொள்ளாத உயர் அதிகாரிகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்
-
கல்லறை திருநாளில் கூட்டு பிரார்த்தனை