வேளாண் கல்லுாரி மாணவிகள் களப்பயணம்

புதுச்சேரி: காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவிகள் புராணசிங்கு பாளையம் பகுதியில் களப்பயணம் மேற்கொண்டனர்.

மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில், காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் குருலட்சுமி, ஜெசிகா சரோன், தனிகா, பவித்ரா, ேஹா சங்கரி, கார்குழலி, திவ்யஸ்ரீ, பவானி தீப்தி, கிளாரா பிரிகிடா, ஆஷா ஜோசப்பின் ஆகியோர் ஊரக வேளாண் அனுபவத்திற்காக மூன்று மாதம் பயிற்சி பெற உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக மதகடிப்பட்டு உழவர் உதவியக வேளாண் அலுவலர் நடராஜன் ஆலோசனையின் பேரில், புராணசிங்குபாளையம் கிராமத்தில், இயற்கை விவசாயம் செய்து வரும் யுவராஜ் என்பவரது நிலத்தில் களப்பயணம் மேற்கொண்டனர்.

இயற்கை விவசாயத்தில், பூச்சி மேலாண்மை, நோய் கட்டுபாடு மற்றும் இயற்கை விவசாய பொருட்களை சந்தைபடுத்தும் முறை குறித்து கேட்டறிந்தனர். ஏற்பாடுகளை மதகடிப்பட்டு உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் பக்கிரி செய்திருந்தார்.

Advertisement