கோவில் நிதியை ஹிந்து சமய பணிகளுக்கு பயன்படுத்த ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
சென்னை: ‘கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, முழுமையாக கோவில்களுக்கும், ஹிந்து சமய பணிகளுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என, ஹிந்து முன்னணி அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 44,000க்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றின் ஆண்டு வருமானம், பல்லாயிரம் கோடி ரூபாயை தாண்டும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள, 10 முன்னணி கோவில்கள் மட்டுமே, ஆண்டுக்கு 942 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இது முழுக்க, முழுக்க இறை நம்பிக்கையோடு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணமாகும்.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பணத்தை, 100 சதவீதம் பக்தர்களின் நலனுக்காகவும், ஆன்மிக பணிகளுக்காகவும் மட்டுமே, அரசு செலவிட வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, தங்கும் இடங்களை கட்டமைக்க வேண்டும். அதேபோல், தேவார பாடசாலைகள், வேத பாடசாலைகள் மற்றும் ஹிந்து சமய பள்ளிகளை உருவாக்குதல், கோசாலைகள் மற்றும் நந்தவனங்களை அமைத்து பராமரித்தல் போன்ற திட்டங்களை மேற் கொள்ள வேண்டும்.
கோவில்களுக்கு பக்தர்கள் பெருந்திரளாக வருவதால், தமிழக அரசின் அனைத்து துறைகளுமே பயன்பெறுகின்றன. பக்தர்கள் வருகையால், உள்ளூர் வணிகம் சிறக்கிறது. வர்த்தக பெருக்கத்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. அரசு பேருந்துகள் மற்றும் ரயில்வே துறைக்கு, கட்டண வருவாய் குவிகிறது.
இப்படி அனைத்து வழிகளிலும், அரசுக்கு தனியாக வருமானம் கிடைக்கும்போது, கோவிலின் காணிக்கை பணத்தில், ‘உள்கட்டமைப்பு வளர்ச்சி’ என்ற பெயரில் கைவைக்க அரசு நினைக்கக் கூடாது. கோவில்களின் சொத்துக்கள் மற்றும் காணிக்கை பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என, ஆண்டுதோறும் முழுமையான ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!
-
ரூ.100 கோடி லஞ்சம்; 5 மாதம் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ சரண்
-
ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்; ஐநாவில் இந்தியா யோசனை
-
அரசிற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி
-
இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி