இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு

- நமது நிருபர் -




சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் திங்கள் கிழமை (அக்டோபர் 26) ஆபரண தங்கம் கிராம் 13,085 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது; வெள்ளி விலை கிராம் 220 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 27) ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

நேற்றைய நிலவரம்

நேற்று (அக்டோபர் 28) ஆபரண தங்கத்தின் விலை 480 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 13,195 ரூபாய்க்கும் விற்பனை ஆனது; வெள்ளி விலை ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இன்று (அக்டோபர் 29) தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராம் 13,195 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றம் கண்டுள்ளது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 215 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Advertisement