ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்; ஐநாவில் இந்தியா யோசனை
நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது; போர்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஒரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. சுமார் 75 கோடி பெண்கள் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து 50 கிலோமீட்டர் எல்லைக்குள் வாழ்கின்றனர். போர் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகள் ஒரே ஆண்டில் இரட்டிப்பாகி உள்ளது. யுதப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கூடுதல் பாதுகாப்பை அளிக்க உதவும் .
ஐ.நா. அமைதிப்படை அதிகாரிகளாக மேஜர் சோனியா தேவேந்திர நிவாஸ்கர், மேஜர் மொய்ஸ் யாசீன் ஆகிய இரு இந்திய ராணுவ மேஜர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்திய ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கை அதிகரிக்க சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. போர் பிரிவுகள் உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரிகளாகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போர் விமானிகள் முதல் ராணுவ தூதர்கள் வரை பல்வேறு பொறுப்புகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன.
2023ம் ஆண்டின் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் பார்லி, சட்டசபையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் முடிவெடுக்கும் இடங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் நிலையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும், இவ்வாறு கூறினார்.
மேலும்
-
அர்னாப் புயல் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்படும்; அமித் ஷா
-
நவம்பர் 2 வரை ஜாமின் கிடையாது; திமுக மாஜி அமைச்சர் மகேஷ் மனு ஒத்திவைப்பு
-
250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான்; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி!
-
ரூ.100 கோடி லஞ்சம்; 5 மாதம் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ சரண்
-
அரசிற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி
-
இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு