ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு டி.ஜ.ஜி., உத்தரவு

புதுச்சேரி: கிராமப்புறங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

புதுச்சேரி போலீஸ் துறை சார்பில், வாராந்திர ஆலோசனைக் கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி.,க்கள் ராகவ், நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பி.என்.எஸ்., குறித்தும், கடந்த வார குற்ற சம்பவங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, கிராமப்புறத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைத்து முறை ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். நகரப் பகுதியில் ஏழு முறை ரோந்து பணிகளில் ஈடுபட டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

Advertisement