டாடாவை விஞ்சியது ரிலையன்ஸ்

நே ற்று பங்கு சந்தைகளில் ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ பங்குகள் பட்டியலிடப்பட்டதால், டாடா குழுமத்தை விஞ்சி, நாட்டிலேயே அதிக சந்தை மதிப்பை கொண்ட தொழில் குழுமமாக, ரிலையன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட்டதால், ரிலையன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என புளூம்பெர்க் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுவரை நாட்டிலேயே அதிக சந்தை மதிப்பை கொண்ட தொழில் குழுமமாக இருந்த ‘டாடா’ குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, கிட்ட த்தட்ட 25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலும், சந்தை மதிப்பு அடிப்படையில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், இரண்டாம் இடத்தில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனமு ம் உள்ளன.

மேலும், உலகளவில் அதிக மதிப்பை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலில் ஜியோ ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Advertisement