நிப்டியில் முன்னேறும் தொலைத்தொடர்பு துறை

தொ லைத்தொடர்பு துறை நிப்டி குறியீட்டில் அதிக பங்களிப்பை கொண்ட துறைகளில் ஒன்றாக முன்னேறக்கூடும் என்று ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் பங்கஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

வரும்காலத்தில் நிப்டி குறியீட்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய துறையாக தொலைத்தொடர்பு துறை உருவெடுக்கப்போகிறது. மீண்டும் தொலைத்தொடர்பு கட்டணங்கள் 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் மேற்கொண்ட முதலீடுகளால் லாபத்தை ஈட்டும் காலகட்டத்தையும் நிறுவனங்கள் எட்டியுள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement