அடுக்குமாடி கட்டட உயர வரம்பு தளர்வு விதிகளை திருத்தியது வீட்டுவசதி துறை
சென்னை: அதிக உயரமில்லாத பிரிவில் கட்டப்படும், அடுக்குமாடி கட்டடங்களின் உயர வரம்பை, 64 அடி வரை அதிகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், பொது கட்டட விதிகள், 2019ல் அமலுக்கு வந்தது. அதில் தேவைக்கு ஏற்பவும், கட்டுமானத் துறையினரின் கோரிக்கை அடிப்படையிலும், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, தற்போது பொது கட்டட விதிகளில், திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
* தற்போது அதிக உயரமில்லாத பிரிவு, அடுக்குமாடி கட்டடங்களின் உயர வரம்பு 60 அடி, அதாவது, 18.30 மீட்டர். இது, 64 அடி அதாவது, 19.50 மீட்டர் என திருத்தப்பட்டுள்ளது
* மனை அமைந்துள்ள சாலையின் அகலம் அடிப்படையில், தளபரப்பு குறியீடு கடைப்பிடிக்கப்படும். இதன்படி, சாலை அகலம், 39 அடியாக இருந்தால், இரண்டு மடங்கு, 44 அடியாக இருந்தால், 2.5 மடங்கு, 59 அடியாக இருந்தால், 3.25 மடங்கு, எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படும்
* சென்னை பெருநகரில், 39 அடி அகல சாலை இருந்தால், அங்கு வணிக கட்டடங்கள் அனுமதிக்கப்படும். பிற பகுதிகளில், 29 அடி சாலை இருந்தால், வணிக கட்டடங்கள் அனுமதிக்கப்படும்
* நீர்பிடிப்பு பகுதிகளில், கட்டடங்களுக்கான தளபரப்பு குறியீடு, பக்கவாட்டு காலியிட வரம்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன
* தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, பயன்பாட்டு கட்டடங்களில், 750 சதுரடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் இருக்க வேண்டும்
* உணவகங்கள், விடுதிகளில், திறந்தவெளி சமையலறை அனுமதிக்கப்படும்
* அதிக உயரமில்லாத பிரிவு அடுக்குமாடி கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகு வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை, பணி நிறைவு சான்றிதழ் ஆய்வில் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவுக்கு, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் தமிழகப் பிரிவு, சென்னை பிரிவு நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை