அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவராக விண்ணப்பிக்கலாம்
தேனி: மத்திய அரசின் அஞ்சல், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை நடக்கிறது.
18 வயதிற்கு மேற்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு அரசு ஊழியர், கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நேரடி முகவர்கள் பணி சேவைக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சேர்க்கைக்கு தேர்வாகுபவர்கள் ரூ.5000 மதிப்புள்ள சேமிப்பு பத்திர கணக்கினை தபால் அலுவலகத்தில் தங்கள் பெயரில் துவங்க ஜனாதிபதி பெயரில் ஈடு செய்ய வேண்டும்.
உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பி தரப்படும்.
தகுதி உள்ளவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ‘தபால் கோட்ட கண்காணிப்பாளர், தேனி 625531’ என்ற முகவரிக்கு அக்.30க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 99768 21104 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026