குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
சென்னை: குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கை கோள்கள் உதவி செய்யுமா? செஞ்சி சிறுமி காணாமல் போனதை குறிப்பிட்டு நிருபர்கள் கேள்விக்கு, இஸ்ரோ தலைவர் நாராயணன் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது: நம்மிடம் தற்போது 56 செயற்கைக் கோள்கள் இருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் கண்காணித்துக் கொண்டிருப்பதற்கு ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள் தேவை. அதனால் 56 செயற்கைக் கோள்களை வைத்து எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால் அது முடியாது. அதுதான் உண்மை, என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி., - எப் 18 ராக்கெட் வாயிலாக என்.வி.எஸ்., - 03 நேவிக் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருப்பது மிகப்பெரிய மகத்தான வெற்றி தான் என்று நான் சொல்லுவேன். இந்த செயற்கைக்கோள் வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றைக்கு உதவியாக இருக்கும். இது மக்களுடைய பாதுகாப்புக்கு மிகவும் பயன்படும்.
விமான தரையிறங்கும் போது சிக்னல் மற்றும் ரயில் சரியாக எங்கு வந்து கொண்டிருக்கிறது உள்ளிட்ட நேரத்தை கண்டறிவதற்கு பயன்படும்.ககன்யான் திட்டம் வந்து ரொம்ப நல்ல நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 8 ஆயிரம் பரிசோதனைகள் செய்து இக்கிறோம்.
முதலில் ஆட்களை அனுப்புவதற்கு முன்னாடி, ஆளில்லாத ஏவு ஊர்திகள் மூன்றை முதலில் அனுப்பப் போகிறோம். முதலில் அனுப்பக்கூடிய ஏவு ஊர்திகளுக்கு உரிய வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது சந்திரயான் 4,5 க்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. 2028ல் ஏவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆதித்யா எல்-1ல் இருந்து விஞ்ஞானபூர்வமாக நிறைய டேட்டா நமக்கு வந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் எல்லோரும் அதை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 2027 மார்ச் அல்லது ஏப்ரலில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து முதல் ராக்கெட் ஏவப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு நாராயணன் கூறினார்.
கடந்த ஆட்சி பற்றி குற்றம் குறை கூறிய த....களுக்கு இப்போது தெரிந்து இருக்கும்
சட்டம் ஒழுங்கு எவ்வளவு கடுமையான சவால் நிறைந்த ஒன்று என்றுமேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி