ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பலன்களுக்காக காத்திருப்பு
கோவை: மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 33 மனுக்கள் வழங்கப்பட்டன.
வீரகேரளம் சித்தி விநாயகர் காலனி குடியிருப்போர் சங்க தலைவர் விஸ்வநாதன் அளித்த மனு:
எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் சரியாக இயங்குவதில்லை. வடிகால் நிரம்பி எதிர் திசையில் வீடுகளுக்குள் வருகிறது. மழை காலங்களில் 4 அடிக்கு மேல் கழிவுநீருடன் கலந்து நிற்கிறது. நீர் வடிந்தாலும் ரோட்டில் சகதி படிந்துள்ளது. கழிவுநீரை மாற்று பாதைக்கு திருப்பி விட வேண்டும்.
நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ஆனந்த் மனு:
உக்கடம் ஜி.எம். நகரில் இருந்து சன் கார்டன் செல்லும் பாதையில் ராஜவாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளதால் வாய்க்காலை ஒட்டி வேலி அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம் அளித்த மனு:
மாநகராட்சி பள்ளிகளில் ஓய்வு பெற்ற 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, 2024 முதல் ஓய்வு பலன்கள் வழங்கவில்லை. சிறப்பு வைப்பு தொகை, போனஸ் வழங்கவில்லை. ஒரு ஆசிரியைக்கு ஒரு மாத சம்பளமே நிலுவையில் உள்ளது. கல்வி பிரிவில் முறையான பதில் இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை