தார் சாலை கேட்கின்றனர் சீங்கப்பதி கிராம மக்கள்

சாடிவயல்: போளுவாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில், மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பதி மலை கிராமம் உள்ளது. கிராமத்தில் சுமார், 65 குடும்பங்கள் வசிக்கின்றன.

அடர் வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு செல்ல, சாடிவயல் சோதனைச்சாவடி முதல் கோவை குற்றாலம் பழைய பார்க்கிங் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவை குற்றாலம் சாலையில் இருந்து சீங்கப்பதி மலை கிராமத்திற்கு செல்லும், 600 மீட்டர் துாரம், தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

மழைக்காலங்களில், இச்சாலை முழுவதும் சேறும் சகதியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இங்கு தார்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement