மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கணும்: கமிஷனர்

கோவை: மாநகராட்சி நிர்வாகம், கைடன்ஸ் தமிழ்நாடு, போக்குவரத்து மேம்பாடு மற்றும் கொள்கை நிறுவனம் (ஐ.டி.டி.பி) இணைந்து மின்சார வாகனம் தொடர்பான கருத்தரங்கை நடத்தின.

நிகழ்ச்சியில் தொழில் அமைப்பினர், வல்லுநர்கள் பேசுகையில், கோவை மொத்த வாகன பதிவில், மின்சார வாகனங்களின் பங்கு 8 சதவீதமாகும். மாநகரில் அடுத்த 5 ஆண்டுக்கான மின்சார வாகன செயலாக்க திட்டம் உருவாக்க வேண்டும் என்றனர்.

மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா பேசுகையில், மின்சார வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே உள்ள பொது பார்க்கிங், பெட்ரோல் நிலையங்களை பயன்படுத்துவது குறித்து ஆராய்வோம் என்றார்.

மாநகராட்சி, அரசு போக்குவரத்து கழகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், போலீசார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertisement