கஞ்சா விற்ற மாணவர் உட்பட 3 பேர் கைது
புதுச்சேரி: தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் 2 பேர் கஞ்சா விற்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
உப்பளம், உடையார்தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு பெருமாள் மகன் கோகுந்தன், 25; உப்பளம், நேதாஜி நகர், வீரன் கோவில் தெரு மனோகரன் மகன் சூரியபிரகாஷ், 25, என்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து, 123 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ஒரு பைக் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கோகுல், சென்னை, தனியார் கல்லுாரியில் பி.டெக்., 3ம் ஆண்டு படித்து வரும் லாஸ்பேட்டை, எழில் நகர் முகமது அமின் மகன் முகமது அமன், 22; என்பவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை வாங்கி வந்து, தேங்காய்திட்டு பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
முகமது அமனை போலீசார் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
மேலும்
-
அரசிற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி
-
இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்