கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,

இந்துார்: மத்திய பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தனா, பின்ஜனா பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில், செப்., 27 முதல் அக்., 16 வரை, கள்ளச்சாராயம் குடித்த 32 பேர் பலியாகினர். இது தொடர்பாக, மதுக்கடைமேலாளர் இருவர், விற்பனையாளர்கள் இருவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒருவரான அஜய் ரத்தோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரசாயனம் மற்றும் தண்ணீரை கலந்து வீட்டில் கள்ள சாராயம் தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

Advertisement