பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
செபு: 13வது ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு பிலிப்பைன்ஸின் செபு நகரில் நடந்தது. இதில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது; இன்று நாம் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இந்தியாவின் இந்தோ-பசுபிக் தொலைநோக்குக் கொள்கைக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியமானது. அதிகரித்து வரும் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் இணைந்து செயல்படுவது அவசியமாகும். இவ்வாறு கூறினார்.
ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷின்ஜிரோ கோய்ஷூமி, ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லேஷூடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, 'ஜெய்' (JAI) எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மக்டன் எக்ஸ்போவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
மேலும்
-
ஊரை விட்டு ஒதுக்கியதாக எஸ்.பி.,யிடம் தம்பதி மனு
-
மானியத்தில் வேளாண் கருவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
-
வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
-
ஒழுங்குமுறை விற்பனை கூட எடை பணி தொழிலாளர் சங்கத்தினர் 2ம் தேதி போராட்டம்
-
தரமற்ற விதையால் வெண்டை பயிர்கள் வீண் விவசாயிகள் வேதனை
-
காதலை கைவிட மறுத்த சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த ‘பாசக்கார’ தந்தை: வானுார் அருகே பயங்கரம்