ஏனாம் நிவாரண முகாமில் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு
புதுச்சேரி: அர்னாப் புயலின் தாக்கத்தால் ஏனாம், சாவித்திரி நகரில் கடல் நீர் 3 முதல் 4 அடி வரை உயர்ந்து, நிவாரண முகாமின் தரைத்தளத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல், மிகத் தீவிர புயலாக வலுவடைந்து, இன்று காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏனாம் பகுதியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா ஆகியோருடன் இணைந்து புயல் எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று நள்ளிரவு முதல் ஏனாம் பகுதியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், சாவித்திரி நகர் பகுதியில் கடல் நீர் 3 முதல் 4 அடி வரை உயர்ந்து, நிவாரண முகாமில் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது.
காற்றின் காரணமாக பெரிய மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது, மின்தடை ஏற்பட்டதால் இருள் சூழ்ந்தது.
இந்நிலையில், புயல் காரணமாக தண்ணீர் புகுந்த நிவாரண முகாமை பார்வையிட்ட தாள்ளரேவு மற்றும் கடிமோகா கிராமங்கள் வழியாகச் சாவித்திரி நகருக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சென்றார்.
அங்கு, நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களைத் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்திற்கு மாற்றுவதுடன், சாவித்திரி நகர் மக்களைப் பாதுகாப்பாக கிரியம்பேட்டிற்கு அழைத்துச் செல்வதற்கும் பிராந்திய நிர்வாக அதிகாரி மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை