ரூ.9,500 கோடி தருகிறோம்; தாக்குதல்களை நிறுத்துங்க..: ஹவுதியுடன் சவுதி டீல்

20

ரியாத்: தங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த, ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான் வாயிலாக, 9,500 கோடி ரூபாய் வழங்க, சவுதி அரேபியா முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்காசிய நாடான ஏமன் அரசுக்கும், அந்நாட்டில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஏமன் அரசுக்கு, மற்றொரு மேற்காசிய நாடான சவுதி அரேபியா ஆதரவளித்து வருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.

ஏமனின் முக்கிய பகுதிகளை, ஹவுதி அமைப்பு சமீபத்தில் கைப்பற்றியது. இதையடுத்து, ஹவுதிக்கு எதிராக ஏமன் அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. அதற்கு, சவுதி அரேபியாவும் உதவியது. இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா மீது ஹவுதி அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் ஆலைகள் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்த, ஈரான் நாட்டின் மத்தியஸ்தத்துடன், ஹவுதி அமைப்புக்கு, 9,500 கோடி ரூபாய் பணம் வழங்க சவுதி அரேபியா முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

@block_G@

ராணுவ அமைச்சகம் மீது தாக்குதல்



தலைநகர் ரியாத்தில் உள்ள சவுதி அரேபிய ராணுவ அமைச்சக கட்டடத்தின் மீது ஏவுகணை மூலம் நேரடி தாக்குதல் நடத்தியதாக ஹவுதி பயங்கரவாத அமைப்பு நேற்று இரவு தெரிவித்தது. இந்த ஏவுகணை எந்தவிதத் தடையும் இல்லாமல், தன் இலக்கை மிகத் துல்லியமாக நேரடியாக தாக்கியதாக ஹவுதி கூறியுள்ளது.block_G

Advertisement