நிதி நிலைக்கு ஏற்றார் போல செலவு செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்

6

சென்னை: உலக சிக்கன தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை:

சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் நாள் உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது.

செலவு செய்தது போக எஞ்சியதை சேமிக்காமல் சேமித்தது போக எஞ்சியதைச் செலவு செய்தால் எதிர்காலத்தில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கலாம்.

இன்று நாம் செய்யும் சிறுசேமிப்பு தான், ஆபத்து காலத்தில் நமக்கு பேருதவியாக துணை நிற்கும். '' சிறுதுளி பெருவெள்ளம்'' என்பதற்கு இணங்க நாம் சேமிக்கும் ஒவ்வொறு சிறிய தொகையும் நம் எதிர்காலத்தை பாதுகாக்கும்.

ஒருவர் தன் நிதி நிலையை அறிந்து அதற்கு ஏற்றார் போல செலவு செய்ய வேண்டும். அதை தவிர்த்து ஆடம்பரத்திற்காக கடன் வாங்கி செலவு செய்வது ஒருவரை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்

ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய அருகில் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை துவங்கிட வேண்டும். சேமிப்பின் வாயிலாக சிறந்த வாழவுக்கு வழிவகுப்போம் என்று உலக சிக்கன நாளில் உறுதியேற்போம்.இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Advertisement