கணக்கில் இருந்த ரூ.35 கோடி மாயம்: பிஎன்பி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

1

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின்வின் அசிஹர் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை உள்ளது. இந்த பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

அவர்களில் பலரது வங்கிக்கணக்கில் இருந்து பணம் திடீரென மாயமானது. தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க முயன்ற போது பணம் இல்லாதது தெரிந்தது.

'' பணப்பரிமாற்றம் நடந்ததற்கான எந்த குறுஞ்செய்தியும் தங்களுக்கு வரவில்லை. தங்களுக்கு தெரியாமலும், அனுமதி இன்றியும் வேறு வங்கிக்கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டது. பாஸ்புக்கை புதுப்பிக்க சென்றால், ரிசர்வ் வங்கி தணிக்கை நடப்பதாக கூறி தாமதப்படுத்துகின்றனர்'' என பலர் புகார் கூறினர்.

சேமிப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்புத் தொகையில் இருந்து ரூ.35 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வங்கி மேலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர், '' எனது சேமிப்பு கணக்கில் ரூ.39 லட்சம் இருந்தது. தற்போது ஒரு ரூபாய் கூட இல்லை. பணப்பரிமாற்றத்திற்கான எந்த ஆவணத்திலும் கையெழுத்து போடவில்லை,'' என்றார்.

விவசாயி ஒருவர் கூறுகையில்,'' எனது கணக்கில் ரூ.88 லட்சம் இருந்தது. தற்போது ஒரு லட்ச ரூபாய் தான் உள்ளது எனக்காட்டுகிறது,'' என்றார். பணம் மாயமான நிலையில், இதற்காக இழப்பீடு பெற்றார்.

தேநீர், சமோசா விற்கும் பெண் ஒருவர், வங்கிக்கணக்கில் 1.29 கோடி ரூபாய் இருந்தது. அவரது நிலம் விமான நிலைய பணிக்காக கையகபடுத்தப்பட்டதற்காக இழப்பீடு வழங்கிய பணம். இதுவும் இந்த வங்கிக்கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. தற்போது அந்த பணமும் இல்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

Advertisement