ஈரோடு ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுதால் பயணிகள் அவதி
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் பழுதால், 20 நாட்களாக வயதான பயணிகள், படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி சிரமப்படுகின்றனர்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 55க்கும் மேற்பட்ட ரயில் வந்து செல்கிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர், லிப்ட் மற்றும் படிக்கட்டு வழியாக பிளாட்பார்ம் எண், 1-2க்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்கலேட்டர் பழுதாகி, 20 நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் படிக்கட்டு வழியாக பிளாட்பார்முக்கு ஏறி, இறங்கி செல்கின்றனர். லிப்ட்டுக்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எஸ்கலேட்டர் வசதி இல்லாததால் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். லிப்ட் வசதி உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. எனவே விரைந்து எஸ்கலேட்டரை சரி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
ரயில்வே அலுவலர்கள் கூறும்போது, 'சமீபத்தில் பெய்த மழையால் எஸ்கலேட்டர் இயந்திரத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது. முதலில் மழை நீர் முழுமையாக வடிய வேண்டும். அதன் பின்னரே இயந்திரத்தின் பழுதை சரிபார்க்க முடியும்' என்றனர்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 2 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை