பார்டர் - ஜரிகையுடன் தயாராகும் அரசின் இலவச வேட்டி - சேலை

ஈரோடு: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக வேட்டி-சேலை வழங்கப்படவுள்ளது. இதற்காக, 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

இதுபற்றி நெசவாளர்கள் கூறியதாவது: கடந்த ஒன்றரை மாதமாக வேட்டி, ஒரு மாதமாக சேலை உற்பத்தி பணி நடக்கிறது. ஈரோடு பகுதியில், 8,000 விசைத்தறிகளுக்கு மேல் இப்பணி நடந்து வருகிறது. பார்டருடன் கூடிய வேட்டிகள் உற்பத்தி செய்து, கோ-ஆப்டெக்ஸ் குடோனுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து பிளீச்சிங் செய்து மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படும். அதுபோல ஜரிகை பார்டருடனான சேலை தயாரிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு பின் மாவட்ட வாரியாக வேட்டி, சேலை அனுப்ப வேண்டிய பட்டியல் கிடைக்க பெற்றதும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடக்கும். அதுவரை கோ ஆப்டெக்ஸ் மற்றும் சொசைட்டி குடோன்களில் இருப்பு வைக்கப்படும்.இவ்வாறு கூறினர்.

Advertisement