வணிக வரி அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்ற முறையீடு
ஈரோடு: வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வனிடம், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) தலைவர் ராஜமாணிக்கம் தலைமையிலானோர் மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு மாநகர், மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதி தொழில் துறை, வணிக நிறுவனங்களின் வரவு - செலவு கணக்குகளை சரி பார்க்க, கொடுமுடி வட்டாரத்தில் உள்ள வணிக வரி அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த அலுவலகம் கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. கொடுமுடி வட்டாரம் என்பது ஈரோடு நாடார்மேடு பகுதியில் இருந்து துவங்குகிறது. நாடார் மேடு பகுதியில் உள்ள ஒரு வணிகர், தனது கணக்கை சரி பார்க்க, கரூர் மாவட்ட எல்லை பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் வணிக வரித்துறை சார்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கொடுமுடி வட்டார வணிக வரித்துறை அலுவலகத்தை இங்கு மாற்றினால், அனைத்து வகை வணிகர்களும் பயன் பெறுவர். விரைவான சேவையும் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை