மாணவர் இறந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் இடமாற்றம்
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில், தலைமை ஆசிரியர் இரு மாதங்களுக்கு பிறகு இடமாற்றம்
செய்யப்பட்டார்.
இடைப்பாடி அருகே உள்ள, செட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் காளிமுத்து வைரமணி. இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் கடந்த ஆக., 23ல், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவரின் பெற்றோர், உறவினர்கள் சேர்ந்து, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, தர்ணா போராட்டம் நடத்தினர்.இதனால் பயந்த தலைமை ஆசிரியர் காளிமுத்து வைரமணி, மருத்துவ விடுப்பில் சென்றார். கடந்த 2 மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை. விசாரணை நடத்திய சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், செட்டிபட்டி தலைமை ஆசிரியர் காளிமுத்து வைரமணியை, நங்கவள்ளி மாதிரி பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, விடு
முறையை ரத்து செய்து நேற்று முன்தினம், நங்கவள்ளி மாதிரி பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து வைரமணி பணியில் சேர்ந்தார்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி