கடம்பூரில் வழிப்பாதையில் மரங்களை வைத்து அடைப்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கடம்பூர் ஊராட்சி, க.ராமநாதபுரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழிப்பாதையை, தனி நபர் தனக்கு சொந்தமான பாதை என, மரங்கள், கற்கள் போட்டு அடைத்துள்ளார்.

இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் உருவானது. தவிர, வழிப்பாதையில் பள்ளமும் தோண்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மலைவாழ் மக்கள் அவ்வழியாக செல்ல முடியாததால், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டனர். தொடர்ந்து, கெங்கவல்லி போலீசில் நேற்று புகார் மனு அளித்தனர். சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான நிலையில், போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement